Saturday, July 3, 2021
சுட்டு விடும் சூரியனின்
சிறுவயது தோழியவள்
கல் தோன்றி மண் தோன்றா
காலத்தே தோன்றியவள்
சங்கம் பல கண்டவளே
சேர சோழ பாண்டியரின்
செங்கோலில் நின்றவளே
மொழிகளிலே மூத்தவளே
முதுமை நிலை அற்றவளே
தரணியிலே உனக்கிணையாய்
இல்லை என்றும் ஒரு மொழியே!
அன்னை தமிழே
அமுத சுவையே
ஆனந்த கடலே
இன்பத் தேனே
ஈர்க்கும் விசையே
உவகை குன்றே
ஊக்கமே
எழுத்தின் அழகே
ஏற்றத்தின் உருவே
ஐயமில்லா ஒன்றே
ஒப்பற்றவளே
ஓவியமே
அவ்வை வாய் அறமே
தமிழே உன் புகழ் பாட
தனி யுகமே கேட்டிடுவேன்
தாள் பணிந்து வணங்குகிறேன்
தமிழுக்கு முதல் வணக்கம்!!
குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல – நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு
எனும் நாலடியார் நல்வழியில்
அளப்பரிய கல்விப் பணியில்
தடை பல வரினும் படியெனக் கடந்து
பரவிட்ட நுண் கிருமி பள்ளிச்சாலைகளை அடைத்திடினும்
அடைக்கின்ற கதவங்கே மற்றோர் வழிக்கு வித்தெனவே
இணைய வழி கல்வி வழி
எல்லைகளை விரித்திங்கு
பொருளீட்டும் எண்ணமது
எமக்கில்லை கண்டீரோ
தமிழ் பரப்பும் எண்ணமது
தலையாய நோக்கமன்றோ
விதையிட்டு நீர் விட்டோம்
விருட்சமென வளரட்டும்
யாருக்கு தெரியுமிங்கு
மற்றுமோர் கம்பனவன்
நம் தோட்டத்தில் மலரக்கூடும்
தமிழ் பரப்பும் நற் பணியில்
தளிர் நடை போடும் எங்கள்
நட்சத்திரா தமிழ் பள்ளி
உனக்கெங்கள் வணக்கங்கள்
பண்ணை வயலது பச்சை மரத்தடி
கட்டில் உறக்கம் சுகமே
கொஞ்சும் கிளியது காண குயிலது
செவியோரம் இசைப்பது சுகமே
மலையகத் தே ன் சுகமே
முக்கனி கூட சுகமே
மல்லிகை வாசம் சுகமே
இச் சுகமெல்லாம் சுகமேயன்று
தமிழ்மடியிசுகத்தை நினைக்கையிலேயென
அன்னை தமிழின் அமுதச் சுவையை
அள்ளியெடுத்து பருகிடவே
ஆர்ப்பரிக்கும் அலைபோலேங்கள்
அறிவின் வாசல் தேடி விரையும்
அன்பு மொட்டுக்களாம்
மாணவகர்களை வரவேகிறோம்
ஏழு கண்டம் தொட்டு விட்ட எல்லை இல்லா பொதுமறை
ஈரடியில் வாழ்வியலை எடுத்தியம்பிய தமிழ்முறை
நாநூறு புலவர் கண்ட நாலடியார் எனும் மறை
முப்பாலை இவைபோலே
விளக்கிடவே வேறுண்டோ
செம்மொழியாம் தமிழ்க்கங்கே
ஒப்பிடவே இணையுண்டோ என
தாம் களித்த தமிழ் சுவையை
எடுப்பதனால் குறைந்திடாத
பெறுவதினால் தாழ்ந்திடாத
செல்வமாம் கல்வியதை
"தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு" எனும் வள்ளுவன் வாக்கினங்க
பலனேதும் பாராமல்
பாங்குடனே பயிற்றுவிக்கும்
பண்புமிக்க ஆசிரியரே
உம்மை வரவேற்று மகிழ்கின்றோம்
கல்விக்கு வயதில்லை
கற்பனைக்கு குறைவில்லை
எனும் கூற்றை மெய்ப்பித்து
சிந்தனையில் உதித்தவற்றை
சிறு நூலாய் தொகுத்திட்டு
ஆதரவு கரம் நீட்டி உதவிடவே தயங்காதார்
வாழ்த்துரை வழங்க உள்ள
திருமதி கலைவாணி ரவீந்திரன் அவர்களே
உங்களை அன்போடு வரவேற்கிறோம்
கல்வி கரையில கற்பவர் நாள்சில
மெல்ல நினைக்கின் பிணிபல – தெள்ளிதின்
ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப்
பாலுண் குருகின் தெரிந்து,
எனும் செய்யுள் வழியில்
கல்வி பணியில் வெள்ளி விழா கண்டு
ஆராய்ச்சி கட்டுரைகள் படைத்தவரே
சேலம் கலைக்கல்லூரி ஆங்கில துறை தலைவரே
சிறப்பு விருந்தினராய் நம்மை சிறப்பிக்க வந்துள்ள
முனைவர் வே. அன்பரசி
உங்களை வருக வருக என்று வரவேற்கிறோம்
மற்றுமொரு சிறப்பு விருந்தினராய்
தமிழ் பள்ளி என்னும் தோட்டத்தில்
தாமும் ஒரு பயிரிட்டு
எமைப்போலே மற்றாங்கே
cardiff நகரத்தில்
தமிழ் தொண்டு ஆற்றுகின்ற
திருமதி உமா குமார்
மருத்துவம் அது தொழில்
தமிழ் மீது மையல் என
தமிழ் ஊட்டும் குணத்தோடு
கவிதை நயத்தோடு
தமிழ் பற்று கொண்டவரும்
கணையத்தை காப்பவராம்
திரு நாகப்பன் குமார் அவர்களே
உங்களை வரவேற்று மகிழ்கின்றோம்
மற்றுமோர் மைல்கல்லை
மகிழ்வுடனே கடக்குமிந்த
மகிழ்ச்சியான தருணத்தில்
நம்மை வாழ்த்த
வலையொளில் இணைந்துள்ள
பெற்றோரே பெரியோரே
நண்பர்களே
உங்களை இரு கரம் கூப்பி வரவேற்கிறோம்
செல்வத்துள் செல்வம் செவி செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை எனும் குறள் வழியில்
உம செவிகளை கூர்தீட்டி சற்றே சாய்ந்தமர்வீர்
சுட்டி குழந்தைகளாம் சிறு குறும்பு செய்யக்கூடும்
பிழை இருப்பின் பொருத்தருள்வீர்
இன்பத்தை பகிந்திருப்பீர்!
வரவேற்ற மொழிதன்னில்
சொற்குற்றம் பொருட்குற்றம்
ஏதேனும் உண்டென்னில்
அது தற்செயலே என்றெண்ணி
சினம் தவிர்க்க சிரம் கூப்பி கேட்கின்றோம்
தேமதுரத் தமிழோசை திக்கெங்கும் பரவட்டும்
பார்போற்றும் பைந்தமிழின் புகழ் என்றும் நிலைக்கட்டும்
தமிழ் எங்கள் மூச்சென்போம்
தமிழ் எங்கள் பேச்சேன்போம்
என்றென்றும் தமிழாலே இணைந்திருப்போம்!
வாழ்க தமிழ் வளர்க தமிழ்
Monday, March 5, 2012
Tuesday, February 14, 2012
தலைப்பு இல்லை!!
இது வரை இல்லாத ஒரு மாற்றம்
நெஞ்சின் நடுவில் ஒரு போராட்டம்
நினைவே இல்லா முகத்துக்கு
இத்தனை வலிமையா?
தோழி
உன் வார்த்தையின் வசியமா?
பலஹீனமான இதயம் என்று படித்திருந்தேன்
ஆனால்
இன்று உணர்ந்தேன்
சொல்ல தெரியா இவ்வலியும்
ஒரு வகையில் சுகம் தான்!!
உள்ளத்தில் தோன்றும் வார்த்தைகளை
வரிகளாய் தொடுத்து
உன் இதழோரம்
புன்னகையை எதிர்நோக்கி நிற்கின்றேன்!
Wednesday, September 16, 2009
இது கதையில்லை !!
எள்ளி நகையாடும்
உன்
சொற்களும் ஒரு பூங்கொத்துதான்!
எந்த கவிஞனுக்கும்
முள்வேலி தான் முதல் படி!!
பல படிகள் தாண்டியவன் நான்!!
உந்தன் சொல்லும் வலிக்கவில்லை
ஏனோ மனம் அதில் லயிக்க்கவுமில்லை
காரணம் ஒன்றுமில்லை
உன்னை காதலிப்பதை தவிர!!
நான் பிறந்தபோது கவிஞனில்லை
ஆம்
அப்போது நீ பிறந்திருக்கவில்லை!!
நீ என்னை பார்த்தபோதும் நான் கவிஞனில்லை!!
ஆம்
நீ அப்போது என்னை வெறுக்கவில்லை!!
காதலின் வெற்றி தான் கவிஞனாக்குமா?
இல்லை தோல்வி தான் கவிஞனாக்குமா?
விடை தேடி அலைந்தபோது
விடியலாய்
வந்ததுதான் இந்தக் கவிதை!!
எனக்கு தெரியவில்லை!
இது கவிதையில்லாமலும் இருக்கலாம்!!
கிறுக்கல் என்றும் சொல்லலாம்!!
ஊர் சொல்லும் வார்த்தைக்கு
கவலையில்லை!!
நீ உணர்ந்தால் போதும்
இது ஒரு வலியின் உருவம் என்று!
இதைதான் சொல்லவந்தேன் என்று
சொல்லி முடித்துவிட இது கதையில்லை!!
இது தொடங்கி, விடப்பட்ட
ஒரு ஆட்டம்!
இதில் வெற்றி இல்லை!
ஆனால்
தோல்வியுமில்லை!!
இப்போதும் வரி தேடி அலைகின்றேன்!!
வந்தவுடன்
மீண்டும் வருவேன்!!
அதுவரை,இதுவரை
என்றில்லாமல்
எதுவரையும் உனக்காகவே!!
Tuesday, December 2, 2008
அன்பு சகோதரனே..
குலையும் நடுங்குது
பாழாய்போன இந்த
குண்டு வெடி சத்தத்தால் !!
சகோதரனே,
நீ பெற்ற வெற்றி தான் என்ன ??
அடைந்த இன்பம் தான் என்ன??
என் மரணம் உனக்கு மகிழ்ச்சியா?
காலனாய் நீயும் மாறி விட்டாய்...
காவு வாங்க துணிந்து விட்டாய்.
பூமி yengum ரத்தம்
உலகம் முழுவதும் யுத்தம்..
என்று ஓயும் இந்த சப்தம் ??
கண் மூடி நிற்கின்றேன்.
கருவறையும் இங்கு
அதிர்வதை
காண சகியாமல் !!
போதும் இந்த வெறியாட்டம்
தொலையட்டும் சதிராட்டம் .
புது உலகம் படைத்திடுவோம்
ஆயுதமே உலகம் என்றால்
நாளை உலகம் நமக்கில்லை ..
உணர்ந்துவிடு உண்மைதனை
வாழ விடு உன் குடும்பம் தனை